குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் : மோடி தொடங்கி வைத்தார்

டில்லி

குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.


தற்போது ஆட்டோமொபைல் மற்றும் சமையலுக்கு எல்பிஜி பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்ததே. அதில் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை முயற்சியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு எரிவாயு அளிக்கப்பட்டது. இவ்வாறு 66 மாவட்டங்களில் அளிக்கப்பட்டு வந்தது. அந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்ததை ஒட்டி அந்த திட்டம் மேலும் 122 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி டில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர், “இந்த திட்டமானது நாட்டின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்முதல் படியாகும். இந்த திட்டத்தினால் தற்போது இந்த பகுதிகளில் உள்ள எரிவாயு உபயோகிப்பாளர்களில் 70 % பேர் பலனடிவார்கள்.

நாட்டின் எரிபொருள் தேவைக்காக இயற்கை முறையில் எரிசக்தியை உண்டாக்க வேண்டிய சுழ்நிலையில் நாம் இருக்கிறோம். அதனால் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் நாம் உபயோகிக்க வேண்டும். இது மிகவும் அவசியமாகும். இது வரை இந்த குழாய் எரிவாயு திட்டத்தல் 66 மாவட்டங்கள் பலன் அடைந்தன. தற்போது அது 178 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இது 400 ஆக உயரும்” என தெரிவித்துள்ளார்.