காங்கிரஸ் வெற்றியை நடனமாடி கொண்டாடிய “மோடி” ? : வைரலாகும் வீடியோ

க்னோ

மோடியைப் போல உள்ளவர் காங்கிரஸ் வெற்றியை நடனமாடி கொண்டாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிறது.

பிரதமர் மோடியைப் போல் அச்சு அசலாக உள்ள அபினந்தன் பதக் என்பவர் முதலில் பாஜகவில் பிரசாரம் செய்து வந்தார். இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமை அதிசயக்கத்தக்க அளவில் இருப்பதால் பிரசார மேடைகளில் இவரை மோடியைப் போலவே பலரும் கருதி வந்தனர். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சமீபத்தில் அவர் காங்கிரசில் இணைந்துள்ளார். காங்கிரசில் அவரை பிரசாரத்துக்கு பயனடுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் மோடியைப் போல இருக்கும் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது பலரையும் கவர்ந்தது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது மோடியைப் போல் உள்ள அபினந்தன் பதக் நடனம் ஆடி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.