பங்களாதேஷ் பிரதமருடன் மோடி ஆலோசனை

காத்மாண்டு:

பங்களாதேஷ் பிரதமருடன் மோடி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாடு நோபாளத்தில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்தார். அங்கு மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவும் நேபாளம் வந்துள்ளார். அங்கு பிரதமர் மோடியுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.