புதுடெல்லி :

2020-ம் ஆண்டு உலகில் அதிகம் பேசப்பட்ட 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், சுந்தர் பிச்சை, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் உலக அளவில் பேசப்படும் போது கொண்டாடி மகிழும் பா.ஜ.க. தொண்டர்கள் இந்த முறை இருக்க இடம் தெரியாம இருந்துப்போம் என்று இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த இதழில் வந்த செய்திதான் இதற்கு காரணம் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இந்தமுறை பிரதமர் மோடியின் பெயர் அதிகம் பேசப்பட்டதற்கு காரணம் இந்திய முஸ்லிம்கள் மீது அவர் மேற்கொண்ட அடக்குமுறை தான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதசார்பற்ற இந்திய நாட்டில், கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இருந்தபோதும், இதுவரை பிரதமராக பதவி வகித்தவர்கள் அனைவருமே இங்கு வாழும் 80 சதவீத இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே இருந்திருக்கிறார்கள்.

ஆனால், பிரதமர் மோடி ஒருவர் மட்டும் தான் இந்து மதத்தின் காவலர் போலவும் அவர் ஒருவர் தான் இந்து மதத்தில் இருந்து தேர்ந்தடுக்கப்பட்ட பிரதமர் போலவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்று சாடியுள்ளது.

மேலும், இதற்காக மாற்று மதத்தினர் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை செய்கிறார் என்று அந்த இதழில் குறிப்பிட்டுள்ளதுடன், இதன் காரணமாகவே இந்த ஆண்டு இவர் அதிகம் பேசப்பட்ட நபராக திகழ்கிறார் என்றும் கூறியிருக்கிறது.

கொரோனா தொற்று பரவலை சுட்டிக்காட்டி அதன் பின்னணியில் பல்வேறு அடக்குமுறை சட்டங்களை நிறைவேற்றி வருவதையும் விரிவாகக் கூறியுள்ளது.

பிரதமர் மோடியை பற்றி அந்த இதழில் இப்படி தாறுமாறாகக் குறிப்பிட்டிருப்பதே பாஜக தொண்டர்கள் எந்தவிதமான ஆரவாரமும் இன்றி பம்முவதற்கு காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.