எந்தவொரு தேர்தல் வாக்குறுதியையும் மோடி நிறைவேற்றவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு மோடி கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  குற்றம்சாட்டி உள்ளார்.

உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில்  நடைபெற்றது.  இந்த நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழகத்திலேயே கடலூரில் தான் பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் ரூ.34 மட்டுமே விற்பனை செய்கிறோம். இது மிகப்பெரிய கொள்ளை. இதன் காரணமாக கடநத  4 ஆண்டுகளில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு கொள்ளையடித்துள்ளது எனறார்.

பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கடந்த 2014ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவர் வீசிய வாக்குறுதிகளில் ஒன்றுகூட  நிறைவேற்றப்படவில்லை.

வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் மீட்கப்பட்டு ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்றார்,  இது என்ன ஆனது… இதுநாள் வரை எந்த பணமும் வங்கியில் செலுத்தவில்லை. நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

மேலும்,  ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார் அதுவும் நடைபெறவில்லை.பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டிய நாராயணசா,  ஜி.எஸ்.டி வரியால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மக்களிடம்  பணப்புழக்கம் இல்லை,

அடுத்த ஆண்டு வரும்  பாராளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் மிகப்பெரிய பாடத்தை கற்பிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.