இந்திராகாந்தியோடு மோடியை ஒப்பிடுவது இந்திராகாந்திக்கு அவமதிப்பு: ராகுல்காந்தி

டில்லி:

ந்திராவைப்போல் மோடி  கிடையாது… அவரோடு மோடியை ஒப்பிடுவது இந்திராவை அவமதிப்பதாகவும் என்று ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.

“இந்திரா இந்திராதான், இந்தியாவும்  இந்திரா”தான்  என்று கூறிய ராகுல்,  இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு நிறுவனமும் மோடியின் சர்வாதிகார போக்கினால் பின்னடைவை சந்தித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் கேள்வியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு சளைக்கா மலும், ஆணித்தரமாகவும் பதில் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், மோடியின் சர்வாதிகார ஆட்சி காரணமாக நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.. ஆனால்,  மோடியோ, தான் இந்தியாவின் கடவுள் என்று நினைத்து செயல்பட்டு வருகிறார். ஆனால், மோடியின் நடவடிக் கையை காங்கிரஸ் நம்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியுடன் ஒப்பிடுவது தவறு என்று கூறிய ராகுல்காந்தி, அது இந்திராவை அவமதிப்பதாகும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

தனது பாட்டி இந்திரா காந்தி,  அன்பு  மற்றும் பாசத்திற்கு கட்டுப்பட்டுவர் என்ற ராகுல்காந்தி, அவருடைய பணி இயல்பாகவே ஒற்றுமையாக இருந்தது, அவர் மக்களுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் ஏழைகளின் நலன்மீது அக்கறை காட்டினார் என்றார்.

ஆனால், பிரதமர் மோடியின் நடவடிக்கைகள், அவரது  முடிவுகள்  மக்களிடையே கோபத்தையும் வெறுப்பையும் வளர்த்து, நாட்டில் பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கிறது என்றவர்,  நரேந்திர மோடிக்கு பலவீனமானவர்களுக்கும் ஏழைகள்மீதும் எந்தவித அனுதாபமும்  இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

பல அரசியல் விமர்சகர்கள், மோடியின் ஆட்சியை இந்திரா காந்தியின் ஆட்சியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், இந்திராகாந்தியின் ஆட்சி இரும்புகரம் கொண்டு நடைபெற்றது. அவரது ஆட்சியில் அவருக்கு எதிராக கட்சியிலோ, ஆட்சியிலோ எந்தவொரு அதிருப்தியும் ஏற்பட்டது கிடையாது.  அவரது பிரதமர் அலுவலகம் அதிகார மையமாக காணப்பட்டது. பல அமைச்சர்கள் தன்னிச்சையாக  முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில் பிரதமர் அலுவலகம் மற்றும் அதிகாரிகள் அதுபோலவா செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். பிரதமரின் அலுவலகம் கட்சியினரின் அதிகார மையமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

மோடி தனது விருப்பத்தை நிறைவேற்றும் நிறுவனங்களை மட்டுமே ஊக்குவித்து வருவதாக கூறிய ராகுல், இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் மோடியின் சர்வாதிகார போக்கால் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது என்றார்.

மோடி, தன்னைத்தானே  இந்தியாவின்  இறைவன் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டிய ராகுல்,  காங்கிரஸ்  மோடியின் இதுபோன்ற  அணுகுமுறைகளை ஒருபோதும் நம்புவது இல்லை என்றும் தெரிவித்தார்.

நாங்களும் நாட்டை ஆட்சி செய்துள்ளோம் என்று கூறிய ராகுல்காந்தி,  அரசாங்கத்திலும் இருந்துள்ளோம், எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளோம் என்றவர், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்க்க வேண்டாம்  என்று மோடிக்கு அறிவுரை கூறினார்.

நாட்டில் ஒருசில  நிறுவனங்களை மட்டுமே மோடி பாதுகாப்பதாக கூறிய ராகுல், மோடி இந்தியாவை விட பெரியவர் அல்ல. இந்தியா எல்லாவற்றையும் விட எல்லோருக்கும் பெரியது ” என்று கூறியவர்,  “இந்திரா இந்திராதான், இந்தியாவும்  இந்திரா” தான்  என்று  1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி ஆதரவாளரான டி.கே.பூராஹ், இந்திராகாந்தி குறித்து கூறிய கருத்தை நினைவு படுத்தினார்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.