பொள்ளாச்சி:

மிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிராக அதகளம் செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,  தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் அனல்பற்கும் பிரசாரத்தில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன. இதன் காரணமாக 5முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் டிடிவி, தற்போது பொள்ளாச்சி தொகுதி  வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட உடுமலை பேருந்துநிலையம் முன்பு வாக்கு சேகரிப்பின்போது பொதுமக்களிடையே பேசிய டிடிவி,  பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஜெய லலிதா இருந்திருந்தால் அனைவரையும் பிடித்து  சிறையில் அடைத்திருப்பார்.

ஆனால்,  இப்போது ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் வழக்கை  மூடி மறைக்கப் பார்க்கின்றனர் என்று குற்றம் சாட்டினார். தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி அரசுக்கு 8 சட்ட மன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகிறது. நடைபெற உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர் தலில்  அதிமுக 8 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் எடப்பாடி ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடி யாது என்றவர்,  பிரதமர் மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.