விவசாயிகளுக்கு மோடி ஓரவஞ்சனை! விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு (வீடியோ)
டில்லி,
டில்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய போராட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேரில் வந்து, போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் ரோட்டில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து ராகுல் செய்தியாளர்களிடம் கூறியபோது, நாட்டில் அதிகம் உள்ள பணக்காரர்கள் நலனையே பிரதமர் மோடி பார்க்கிறார். ஏழை விவசாயிகள் பற்றி நினைப்பதில்லை என்றார்.
விவசாயிகளை அவமதிப்பது ஏன் ? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஓரவஞ்சனை செய்கிறார் என்றும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக பார்லி.,யில் குரல் எழுப்புவோம் என்றும் அவர் கூறினார்.