கர்நாடகா தேர்தலில் ரெட்டி சகோதரர்களை கட்டவிழத்துவிட மோடி திட்டம்…..ராகுல்காந்தி

--

 

பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12-ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

 

பிதார் மாவட்டம் அவுரட் பகுதியில் அவர் பேசுகையில்,‘‘நீரவ் மோடி 30 ஆயிரம் கோடி ரூபாயுடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார். இதில் பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? ரபேல் விமானம் ஒன்றின் விலை ரூ. 700 கோடி மட்டுமே. ஆனால் ரூ. 1500 கோடிக்கு வாங்கப்படுவது ஏன்?

கர்நாடக தேர்தலில் கபார் சிங் கும்பலான ரெட்டி சகோதரர்களை கட்டவிழ்த்துவிட மோடி திட்டமிட்டுள்ளார். நான் கேட்கும் கேள்விகளுக்கு மோடியிடம் பதில் இல்லை. அதனால் அவர் என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துகிறார். நான் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடமாட்டேன். இதுதான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.