நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் : மோடி புகழாரம்

டில்லி

நீர்முழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியதாக பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

ஐ என் எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இந்த கப்பல் சுமார் 6 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் தரையில் மற்றும் வானில் உள்ள இலக்குகளை திறம்பட தாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் தனது முதல் ரோந்துப் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டு திரும்பி உள்ளது. இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி, “ஐஎன்எஸ் அரிஹந்த் நீர் மூழ்கிக் கப்பல் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதற்கான பணிகளை செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா நடத்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை க்கு பிறகு உலக அளவில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் நமக்கு பெருமைய சேர்த்தது. அரிஹந்த் நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திஉள்ளது. அணு ஆயுத மிரட்டல்களை தடுக்க இது போன்ற கப்பல்கள் அவசியமானவை” என தெரிவித்துள்ளார்.