வெங்கையா நாயுடுவுக்கு புகழாரம் சூட்டிய மோடி

டில்லி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு  எழுதிய புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதிமுதல் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் ஆகிய பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.   பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான வெங்கையா நாயுடுவின் ஒருவருட அனுபவத்தை புத்தகமாக அவரே எழுதி உள்ளார்.

ஆங்கிலத்தில், “MOVING ON MOVING FORWARD : A YEAR IN OFFICE”  என பெயரிடப்பட்ட இந்த 246 பக்க புத்த்கம் இன்று வெலியிடப்பட்டது.   வெங்கையா நாயுடுவின் பல அரசியல் செயல் பாடுகள் மற்றும் முக்கிய விவகாரங்களில் அவருடைய பங்களிப்பு உள்ள்ட்ட விவரங்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட இந்த நூல் வெளியிடப்பட்டது.   இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பலர்  பங்கேற்ற்னர்.

விழாவில் பேசிய மோடி, “விவசாயிகளின் நல்வாழ்வுக்காகவும் விவசாயத்துக்காகாவும் செயல்பட்டவர் வெங்கையா நாயுடு.  மறைந்த பிரதமர் வாஜ்பாய் வெங்கையா நாயுடுவை அமைச்சராக்க விரும்பிய போது இவர் ஊரக வளர்ச்சியை விரும்பிக் கேட்டார்.  வெங்கையா நாயுடு மனதளவில் எப்போதும் விவசாயியாகவே வாழ்கிறார்” என புகழ்ந்துள்ளார்.

You may have missed