சீனாவில் இருந்து இந்தியா திரும்பினார் மோடி

டில்லி:

2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இதையடுத்து மோடி தனி விமானம் மூலம் வுஹான் நகரில் இருந்து இந்தியா புறப்பட்டார்.

விமான நிலையத்தில் சீன அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இந்தியா வந்தடைந்த பிரதமரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.