மோடியின் தோட்டாக்களால் தமிழர்களை நசுக்க முடியாது!:  ராகுல் காந்தி

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை  மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதில் பதினோரு பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

இது குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், “ தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் . சித்தாந்தத்திற்கு தமிழர்கள் அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது.

தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.