நிர்மலா சீதாராமனை கர்நாடகாவை சேர்ந்தவர் என்ற மோடி! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னடர்கள்!

பெங்களூர்: தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கன்னடர் என்று மோடி பொய் சொல்லியதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே 12ம் தேதி நடக்க இருக்கிறது.  தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.  பிரதமர் மோடியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக  பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் பல்லாரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த மோடி, “பாஜக எப்போதும் பெண்களுக்கு மதிப்பளிக்கும். எங்கள் ஆட்சியில் கூட பெண் ஒருவர்தான் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்”  என்று கூறினார். மேலும், ”கர்நாடக பெண்ணை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமித்து இருக்கிறேன். கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் நிர்மலா சீதாராமன். அதேபோல் கர்நாடகாவை சேர்ந்த வெங்கையா நாயுடுதான் துணை குடியரசுத்தலைவர்” என்றுள்ளார்.

நிர்மலா சீதாராமன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வெங்கையா நாயுடு ஆந்திரத்தைச் சேர்ந்தவர்.

ஆகவே கன்னடர்கள் மோடியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

“எப்படி ஒரு தமிழ்ப்பெண்ணை கன்னடர் என்று கூறலாம்” என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கிறார்கள்.