ஷாங்காய்,

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி வரும் 8ந்தேதி ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்புடன் எந்தவித சந்திப்பும் நடத்த மாட்டார் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்து உள்ளார்.

கஜகஸ்தானில்  ‘ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு’ வரும் ஜுன் 8-9 ஆகிய தேதிகளில் கஸகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் நடைபெறுகிறது.

ஷாங்காய் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (8ந்தேதி) கலந்து கொள்கிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பும் கலந்து கொள்ள இருக்கிறார்.

சமீப காலமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லை பகுதியில் அந்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  இரு தலைவர்களும் சந்தித்து பேசுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில்  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது, பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் இடையே சந்திப்பு நடைபெறாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஷ்மா சுவராஜ் கூறும் போது, “ அஸ்தனாவில் பிரதமர் மோடி- நவாஸ் ஷெரீப் இடையே எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை. இந்த சந்திப்புக்கு எங்கள் தரப்பில் இருந்தோ அல்லது அவர்கள் தரப்பில் இருந்தோ எந்த திட்டமும் இல்லை” என்றார்.