கறுப்புப்பணம்: மோடி சொன்னார்.. நைஜீரியா செய்கிறது!

சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்டு, இந்தியர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் அளிப்பேன் என்றார் பிரதமர் மோடி. ஆனால் அங்குள்ள இந்தியர்களின் பணம் 2017ல் இருமடங்காக பெருகியுகியுள்ளதுதான் மிச்சம்..

அதே நேரம் இதை நிஜமாகவே நிறைவேற்றியருக்கிறது நைஜீரியா நாடு.

ஆம்.. அந்நாட்டில் ஊழல் செய்து ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை கொண்டுவந்து தமது நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டத்தை செயல்படுத்த  இருக்கிறது அந்நாட்டு அரசு.

 

நைஜீரியாவின் 1990களில் ஆட்சியில் இருந்தவர் ராணுவ தளபதி சானி அபாஷா. இவர் பொறுப்பில் இருந்தபோது ஏராளமான ஊழல்கள் செய்து பற்பல கோடி டாலர் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கினார்.

இதில் 300 மில்லியன் டாலரை சுவிஸ் வங்கிகளில் இருந்து திரும்பப் பெறுவதில் வெற்றி அடைந்திருக்கிறது நைஜீரிய அரசு.

இந்த 300 மில்லியன் டாலரை சுவிஸ்  திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க இருப்பதாக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது.

அதாவது  3 லட்சம் குடும்பங்களுக்கு தலா 14 டாலர் மாதாமாதம் வழங்கப்படும்.