பிம்ஸ்டெக் 4ஆம் மாநாடு : மோடி நேபாள பயணம்

டில்லி

பிம்ஸ்டெக் அமைப்பின் 4 ஆவது மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி நேபாளத்துக்கு 2 நாள் பயணம் சென்றுள்ளார்.

பிம்ஸ்டெக் அமைப்பு இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை,  தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் அமைப்பாகும்.   வங்கக் கடலை சுற்றி அமைந்துள்ள இந்த நாடுகள் தங்காள் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்காக இந்த் அமைப்பை உருவாக்கி உள்ளன.    தொழில்நுட்பம், வர்த்தகம்,  முதலீடு உள்ளிட்ட 14 துறைகளுக்கு இந்த அமைப்பு முன்னுரிமை வழங்கி வருகிறது.

இந்த அமைப்பின் 4 ஆவது மாநாடு நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நடைபெறுகிறது.   இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள இன்று காலை பிரதமர் மோடி நேபாள்த்துக்கு சென்றுள்ளார்.  அவர் அங்கு வரும் பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு நிகழ்த்த உள்ளார்.