தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் செல்ல, தனக்கு அனுமதி அளித்ததற்காக, தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மோடி.

புனித குகை என்றழைக்கப்படும் பகுதியில், மொத்தம் 17 மணிநேரங்கள் செலவிட்ட நரேந்திர மோடி, பூஜைகளையும் மேற்கொண்டார்.

“பிரார்த்தனையின்போது, தான் கடவுளிடம் எதையும் கேட்கவில்லை எனவும், அது தன்னுடைய சுபாவம் இல்லை” எனவும் கூறியுள்ளார் மோடி.

அவர் மேலும் கூறியதாவது, “கடவுள் நம்மை கொடுக்கும் நிலையிலேயே வைத்துள்ளார். கேட்கும் நிலையில் அல்ல. இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித இனமும் மகிழ்ச்சியும், வளமும் மற்றும் நல்வாழ்வும் பெறட்டும்.

இந்த இடத்திற்கு ஏற்கனவே பலமுறை வந்திருக்கின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளேன். மீடியா இங்கே இருப்பது, இந்த இடம் எந்தளவிற்கு முன்னேறியுள்ளது என்பதை நாடு அறிந்துகொள்ள உதவும்” என்றார்.