புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  புதுச்சேரி மக்களின் கலாச்சாரம், பண்பாடு, உரிமையை காங்கிரஸ் கட்சி எந்நாளும் பாதுகாக்கும். காங்கிரசை பொறுத்தவரை மொழியை வைத்தோ, மதத்தை வைத்தோ அரசியல் செய்யவில்லை.

என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை. தேசத்தின் பிரதமராக இருக்கும் மோடி, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளவில்லை. புதுச்சேரி யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்ல. அப்படி நினைத்தால் விரைவில் ஏமாற்றம் அடைவார்கள்.

மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த நாட்டின் பிரதமராக அல்ல, இந்த நாட்டின் ராஜாவாகவே கருதிக் கொள்கிறார்.

தமிழகத்தில் தமிழ் பேசக் கூடாது என்கிறார்கள். மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதி, தீவிரவாதி என்கிறார்கள். மோடி மனதில் என்ன உதிக்கிறதோ, அது தான் அனைவரது மனதிலும் உதிக்க வேண்டும். 6 ஆண்டுகளாக மோடி செய்த அனைத்துமே பணக்காரர்களுக்கு மட்டுமே என்றார்.