அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிகிறார்

டெல்லி: கொரோனா நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வப்போது மாநிலங்களில் உள்ள நிலவரம் குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவார். இந் நிலையில் நாளை  மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.  தடுப்பூசி வினியோகிக்கும் திட்டம் குறித்து இக்கூட்டத்தில் அவர் கருத்துகளை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.