டில்லி:

கிரிக்கெட் வீரர் கோலியின் கேள்விக்கு பதில் அளிக்கும் பிரதமர் மோடி  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது  ஏன்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்கி,  தூத்துக்குடியில் பொது மக்கள் காவல்துறையினரால் சுடப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு  நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்துக்கொண்டிருக்கும் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவால் குறித்து பதிலளிக்க நேரம் இருக்கும்போது, மக்களிடம் பேச நேர மில்லையா?

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்ற சில மாநில மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது போல், தூத்துக்குடி மக்கள் கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? என்றும் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும்,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் காரணமாக தமிழக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.