ஒரு திறமையான இளம் நடிகர், சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார் : பிரதமர் மோடி

--

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

ஆதாரங்களின்படி, சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இவரின் மறைவால் பாலிவுட் திரையுலகினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் இவர் டோனியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது “Dil Bechara” என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இவரது திடீர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புத். ஒரு திறமையான இளம் நடிகர், சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் அவர் திறம்பட மிளிர்ந்தார். பொழுதுபோக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு உந்துதலைத் தந்தது. என்றும் நினைவில் நிற்கும் சில கதாபாத்திரங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சியைத் தருகிறது. அவரது குடும்பத்துக்கு, ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள். ஓம் ஷாந்தி.” என தெரிவித்துள்ளார்.