உகாண்டாவில் படேல் சிலை : மோடி திறந்து வைத்தார்

ம்பாலா

காண்டா தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லப்பாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றுள்ள மோடி வழியில் உகாண்டா நாட்டில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.    கடந்த 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு உகாண்டா செல்லும் இந்தியப் பிரதம்ர் மோடி  ஆவார்.  உகாண்டா தலைநகர் கம்பாலாவில் மோடியும் அந்நாட்டு அதிபர் யோவேரி முசவேனியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

நேற்று பிரதமர் மோடி இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லப்பாய் படேலில் மார்பளவு சிலையை கம்பாலாவில் திறந்து வைத்தார்.  இந்த திறப்பு விழாவில் உகாண்டா அதிபர் கலந்துக் கொண்டார்.  அதன் பிறகு  உகாண்டா நாட்டு பாராஉமன்றத்தில் மோடி உரை ஆற்றினார்.  தனது உரையில் இரு நாட்டு உறவுகள் குறித்து மோடி பேசினார்.

நேற்று மாலை மோடி உகாண்டாவில் இருந்து  தென் ஆப்ரிக்கா சென்றுள்ளார்.  தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் 10ஆம் மாநாட்டில் மோடி பங்கு பெறுகிறார்.   இந்த மாநாட்டில் பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிர்க்கா ஆகிய நாடுகளின் தலைவ்ர்கள் கலந்துக் கொள்கின்றனர்.