லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது விவசாயிகள் மத்தியில் அவர் பேசியதாவது:

டெல்லிக்கு அருகில் 90 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 215 விவசாயிகள் இறந்தனர்.

மத்திய அரசின் தாக்குதல் நடத்திய போது விவசாயிகள் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் டெல்லியின் எல்லைகள் சர்வதேச எல்லைகளாக மாற்றப்பட்டன என்று கூறினார்.