Random image

அமெரிக்க அதிபரின் சொகுசு மாளிகை செல்ல ஆசைப்பட்ட மோடி

வாஷிங்டன்

மெரிக்க அதிபரின் சொகுசு மாளிகையான கேம்ப் டேவிட் சென்று டிரம்ப்புடன் உணவருந்த மோடி விரும்பியதாகவும் அதை டிரம்ப் மறுத்து விட்டதாகவும் ஒரு புத்தகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை குறித்து ஒருபுத்தகம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்தை பாப் உட்வார்ட் என்னும் பிபல எழுத்தாளர் எழுதி உள்ளார்.  இந்த புத்தகம் “அச்சம் : வெள்ளை மாளிகையில் டிரம்ப்” என பெயரிடப்பட்டுள்ளது.   448 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் டிரம்ப் அதிபரானபின் வெள்ளை மாளிகையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி கதை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் ஒரு  பகுதியில் இந்திய பிரதமர் மோடியின் 2017 ஆம் வருடம் ஜுன் 26 ஆம் தேதி அமெரிக்க பயணம் குறித்து எழுதப்பட்டுள்ளது.   இதில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி மெக்மாஸ்டர் இந்திய உறவை மிகவும் வரவேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   அத்துடன் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நட்புறவு கொள்ள விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின் வருமாறு :

இந்தியப் பிரதமர் மோடி முந்தைய அதிபர் ஒபாமாவால் ஓரங்கட்டப்பட்டவர்.  அவர் அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பகை உள்ளது.   பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதால் நமது அரசுக்கு அது மிகவும் தொல்லை தரும். 

இதனால் மெக்மாஸ்டர் இந்தியாவுடன் நல்லுறவை பலப்படுத்த விரும்பினார்.   அத்துடன் மோடி அமெரிக்க அதிபரின் சொகுசு மாளிகையை காணவும் அங்கு சென்று டிரம்புடன் விருந்து உண்டு அவருடனான நட்பை பெற விரும்புவதாகவும் மெக்மாஸ்டர் தெரிவித்தார்.   ஆனால் இது நிகழ்ச்சி நிரலில் இல்லை எனக் கூறி அதற்கு அதிபர் அலுவலகம் மறுத்து விட்டது.

மேலும் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கவே டிரம்ப் விரும்புவ்தாகவும் தெரிவிக்கப்பட்டதால் மெக்மாஸ்டர் கோபம் அடைந்தார்.   பாகிஸ்தானை அடக்க இந்தியாவின் உதவி தேவை என  மெக்மாஸ்டர்  வற்புறுத்தியும் மோடியின் விருப்பப்படி அதிபரின் சொகுசு மாளிகைக்கு அழைத்துச் செல்ல டிரம்ப் விரும்பவில்லை.    வெள்ளை மாளிகையில் மோடிக்கு விருந்து அளிக்கப் பட்டது.

இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா கெஞ்சி வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.    தற்போது மோடி சொகுசு மாளிகைக்கு செல்ல ஆசைப்பட்டும்   அதை டிரம்ப் அலுவலகம் மறுத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.   இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.   இந்தியா தனது மதிப்பை தானே கெடுத்துக் கொள்வதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த புத்தகம் குறித்து இந்திய பிரதமர் அலுவலகம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.