மோடியின் புகழால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது!:  ஆர்.எஸ்.எஸ்.  

டில்லி:

“வரும் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் புகழால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்து தெரிவித்துள்ளது

இது குறித்து ஆர்.எஸ். எஸ். தெரிவித்துள்ளதாவது:

“மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி சாதாரண மக்களும் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.

தொடர்ந்து வீசும் மோடி அலையால் மட்டும் வெற்றி கிடைத்து விடாது என பாஜகவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  2004 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த தோல்வி  குறித்தும் பாஜகவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

மேலும், “மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுக்க தயங்க வேண்டாம்” என தனது தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.