டில்லி:

முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங்கை பிரதமர் மோடி அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சந்திப்பின்போது, நாட்டின் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து மன்மோகன் சிங்கிடம் மோடி  ஆலோசனை பெற்றதாக கூறப்படுகிறது.

மோடி தலைமையில் மீண்டும் மத்தியஅரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் 5ந்தேதி 2019–2020ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.

முன்னதாக கடந்த மாதம் (ஜூன்) 27ந்தேதி முன்னாள் பிரதமரும், பொருளாதான வல்லுநருமான மன்மோகன் சிங்கை சந்தித்து, பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி, மன்மோகன் சிங் வீட்டுக்கு வருகை தந்தார். அவரை மன்மோகன் சிங் தனது மனைவியுடன் வாசலுக்கு சென்று வரவேற்றார்.

பின்னர் மன்மோகன் வீட்டுக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு அவருடன் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, மன்மோகன் சிங், மோடிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.