நிலவையும் பூமிக்கு கொண்டு வருவார் மோடி! ராகுல்காந்தி கிண்டல்

அகமதாபாத்,

குஜராத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பா.ஜ. உள்பட கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

இந்நிலையில் குஜராத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக அகிலஇந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, பிரதமர் மோடி நிலவையே பூமிக்கு கொண்டு வந்துவிடுவார் என்று கிண்டலாக பேசினார்.

 

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி . அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கடந்த மாதம் 25ந்தேதி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

தற்போது மீண்டும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது மக்களோடு மக்களா கலந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில்,  குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் ((Chhota Udaipur)) மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், பிரதமர் மோடி 2028ம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அனைவருக்கும் நிலவில் வீடு வாங்கித் தருவார் என்றும், 2025ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நிலவுக்குச் செல்ல ராக்கெட் வாங்கி கொடுப்பார் என்றும்  கிண்டலாக  விமர்சித்தார்.

எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம்  பா..ஜ.க.வும், பிரதமர் மோடியும் வாக்குறுதி களாக அளித்து வருகிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.

குஜராத்தில் ராகுல்காந்திக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை கண்டு பாரதியஜனதா மிரண்டு உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியுமா  என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.  இதன் காரணமாகத்தான் குஜராத்தின்  முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.