புதுடெல்லி :

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 29 வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செய்விசாய்க்கவில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்தார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட போவதில்லை”

“பிரதமர் மோடி, உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்டி இந்த சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், போராடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்”

“தனக்கு வேண்டிய தொழிலதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறாரே தவிர, விவசாயிகளின் நலனைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை” என்று கூறியவர்.

“தன் திட்டங்களை எதிர்க்கும் அனைவரையும், தேச விரோதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் கூறிவருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் மோடி, என்றாவது ஒரு நாள் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகாவத் இவருக்கு எதிராக பேசும்போது அவரையும் தீவிரவாதி என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” என்று ஆவேசமாக கூறினார்.

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது கற்பனையில் தான் உள்ளது, நிஜத்தில் இல்லை” இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.