வாஷிங்டன்

மெரிக்கா வந்து சேர்ந்த பிரதமர், அமெரிக்க அதிபரை சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் இன்று போர்ச்சுகல் நாட்டில் இருந்து அமெரிகா வந்து சேர்ந்தார்.  அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.   அமெரிக்க தூதரும், இந்தியத் தூதரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதிபரின் இல்லமான ஒயிட் ஹவுஸில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள விடுதியில் தங்கியுள்ளார் மோடி.   அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் உடன் சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருப்பதாக பதிந்துள்ளார்..

நாளை அவர் அதிபர் ட்ரம்ப்பை சந்திப்பார் என அவரது சந்திப்பு அட்டவணைகள் தெரிவிக்கின்றன.   ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை ஒரு உண்மையான நண்பர் எனவும், நாளை தமது உண்மையான நண்பருடன் பல முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.