பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து கடிதம்

டில்லி:

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட இல்லத்தில் தங்க இம்ரான் கான் மறுத்துவிட்டார். அதற்கு பதில் ராணுவச் செயலாளர் இல்லத்தில் வசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இம்ரான் கான் கூறுகையில்,‘‘ நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. பிரதமர் இல்லத்திற்கு என 524 பணியாளர்கள், 80 கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 33 கார்கள் குண்டு துளைக்க முடியாதவை. நான் பறப்பதற்கு விமானம், ஹெலிகாப்டர்கள் உள்ளன. பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பினார். ஆனால், மறுபக்கத்தில் நம்முடைய மக்களுக்கு உதவுவதற்குப் பணம் இல்லை என்றார்.

இஸ்லாமாபாத்தின் பனிகலா பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். ஆனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் எனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராணுவ செயலாளரின் இல்லத்தில் தங்க முடிவு செய்து இருக்கிறேன். மேலும் தனக்கு 2 பணியாளர்களும் 2 கார்களும் மட்டும் போதும். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால் கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘பாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா உறுதியளிக்கிறது. பாகிஸ்தானுடனான ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டை இந்தியா எதிர்பார்க்கிறது. பயங்கரவாதமற்ற தெற்காசியாவை அமைய வேண்டியது அவசியம்’’என்று தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Modi wrote greetings letter to Pakistan Prime Minister Imran Khan, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து கடிதம்
-=-