பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார் மோடி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி:

பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டையும், கவுரவத்தையும் மோடி புரிந்து கொள்ள மறுக்கிறார் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பேட்டியில், நாட்டை ஆள்வதில் மோடி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார். அவர் வெளியேறினால் நாடு நிம்மதி பெருமூச்சு விடும்.

கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிர்வாகம் சரிவர நடக்கவில்லை. அனைத்துத் துறைகளிலும் தோல்வி கண்டுள்ளனர்.

ஒன்றுமே செய்யாமல் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இருந்த கண்ணியம் தற்போது இல்லை.

பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாடு மற்றும் கவுரத்தை மோடி புரிந்து கொள்ள மறுக்கிறார்.

முக்கிய பிரச்சினைகளை இன்னும் தொடவில்லை. தீர்க்கப்படவும் இல்லை. மக்கள் இவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: propaganda, மன்மோகன் சிங்
-=-