ண்ணூர், கேரளா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி உள்ளார்.

கேரள மாநிலத்தில் வரும் 23 ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் 20 தொகுதிகள் உள்ளன. இதில் பல தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பாஜக கூட்டணியும் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா மற்றும் திருச்சூர் தொகுதிகளில் வலுவாக உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் உத்திரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவர் இன்று கேரள மாநிலம் கண்ணூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

அந்த கூட்டத்துக்கு பின் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்த , “பிரதமர் மோடி நமது நாட்டை துண்டாக்கி நமக்குள்ளேயே போரிட வைத்து தேச விரோத செயலை செய்துள்ளார். அவர் செய்துள்ள மிகப் பெரிய தேச விரோத செயலானது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 27000 இளைஞர்கள் வேலை இழக்கும் நிலையை கொண்டு வந்தது ஆகும்.

அவருடைய நாட்டுக்கு விரோதமான செய்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். மோடியின் அடுத்த தேச விரோத செயல் ரூ.30.000 கோடி மக்கள் பணத்தை எடுத்து அனில் அம்பானிக்கு கொடுத்தது ஆகும். இவைகளுக்கு மோடி நிச்சயம் பதில் அளிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.