மும்பை,
பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ‘தவறானது’ என்று முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர்  ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக மக்கள் அன்றாடக வாழ்க்கைக்கே வங்கியை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் கூறி உள்ளார்.
கருப்புப் பணத்தையும், கள்ளநோட்டையும்  ஒழிக்கும் விதமாகப் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று கடந்த 8ந்தேதி இரவு அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் தபால் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் இனும் பணப்புழக்கம் சரியாகவில்லை.
இதுகுறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது,
modi-with-raguram
மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு சரியானதாக  எனக்கு தெரியவில்லை.. நாட்டின் கருப்புப் பணத்தைக் களைவதற்காகப் பழைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது சரியான தேர்வு அல்ல.
இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாகக் களையும் வகையிலும், எப்படிக் கணக்கில் காட்டப்படாத பணம் கிடைத்தது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருந்தது.
கருப்புப் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அரசுக்குத் தெரிய வரும்போது கருப்ப பணத்தை ஒழிக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க முடியும்.
கருப்புப் பணம் இந்தியாவில் கருப்புப் பணம் வெறும் பணமாக மட்டுமில்லை, தங்கமாக அதிகளவில் புதைந்துகிடக்கிறது.
மேலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற மக்களிடத்தில் பல வழிகள் உண்டு, இதில் எளிமையான வழி கோவில் உண்டியலில் பணத்தைப் போடுவது. கருப்புப் பணத்தை ஒரு நாட்டில் இருந்து முழுமையாக ஒழிப்பது என்பது எளிமையாகச் செயல் இல்லை.
அதிகளவிலான சலுகை என்னுடைய கணிப்பின் படி கருப்புப் பணத்தை ஒழிக்க அரசு அதிகளவிலான சலுகையை அளிக்க வேண்டும்,
குறிப்பாக வரி விதிப்பில். இவ்வாறு சலுகைகளை அளிப்பதன் மூலம் அதிகளவிலான கருப்புப் பணம் கணக்கில் வரும்.
வரி விதிப்பு என்னுடைய ஆய்வில் இந்தியாவில் மிகவும் குறைவான வரி விதிப்பு மட்டுமே உள்ளது.
blackmoney1
தற்போதைய நிலையில் அதிக வருமானம் பெறுவோருக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வட்டி விகிதம் 33 சதவீதம், அமெரிக்கா வில் 39 சதவீதம் மற்றும் மாநில வரிகளுடன் கிட்டத்தட்ட 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் குறைந்த அளவிலான வரியை மட்டுமே விதிக்கப்படும் நிலையில் கருப்புப் பணம் சேர்க்க வேண்டும் என்ற காரணம் இந்தியர்களிடம் இருக்க வேண்டியது அவசியமில்லை.
ஆயினும் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கருப்புப் பணத்தில் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதினால் சரியான தகவல் களைக் கொண்டு முறையான வரி மற்றும் சலுகையை அறிவித்தாலே போது கருப்புப் பணத்தை எளிமையாகக் குறைக்க முடியும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
தினசரி செலவிற்கான பண தேவையை பூர்த்தி செய்ய மக்கள் வங்கி வாசலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார்.