மேற்குவங்கத்தில் மோடி பிரசார கூடாரம் விபத்து: மக்களின் வேதனையில் ஆதாயம் தேடிய பாஜ

கொல்கத்தா:

மேற்குவங்காளத்தில்  உள்ள மினாட்பூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான  பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்த போது, விழா நடைபெற்று வந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 70 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டது

இந்த நிகழ்வு குறித்து மோடி கண்ணீர், மோடி ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார், காயமடைந்த வர்களுக்கு அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டுள்ளார்  என்றும் பாஜக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  மக்களின் வேதனையை, பாஜக தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி உள்ளது  தெரியவந்துள்ளது.

மோடியின் மருத்துவமனை விசிட்  விவகாரத்தில் பரபரப்பான  தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சோகமயமான விபத்து நடந்து, அதனுள் ஏராளமானோர் சிக்கி கதறிக்கொண்டி ருந்த நிலையில்,  பிரதமர் மோடி அவர்கள் குறித்து எந்தவித கவலையும்படாமல், தனது உரையை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கியவர்களை அந்த பகுதி பொதுமக்கள்தான் மீட்டதாக கூறப்படுகிறது. மோடியின் இந்த செயல் அங்குள்ள பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மோடியின் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் திரண்டிருப்பதாக போலியான தோற்றத்தை ஏற்படுத்த மாநிலத்தின்  பல்வேறு இடங்களில் இருந்து பாஜகவினரால் அழைத்து வரப்பட்ட மக்கள்தான் கூடாரம் சரிந்து விழுந்தததில் சிக்கி காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனயாக மினாட்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர் நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி சந்தித்து கண்ணீருடன் ஆறுதல்  கூறினார்.  அனைவரையும் நலம் விசாரித்தார், ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார் என்று செய்திகள் பரவின.

கூடாரம் சரிந்த விபத்தில் காயமடைந்தவர்கள்

ஆனால், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களோ வேறு மாதிரியாக கூறுகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மோடி வந்து பார்த்தார், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், ஆட்டோகிராப் போட்டார், அதையும் போட்டோ எடுத்தனர்… போய் விட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களுக்கு மருத்துவமனையில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டும் அவர்கள்,  தங்களை மாநில பாஜகவினர் மோடியின் கூட்டத்திற்காக பஸ்களிலும், லாரிகளிலும் அழைத்து வந்தனர். ஆனால், தற்போது நாங்கள் கஷ்டபட்டுக் கொண்டிருக்கி றோம்.. எங்களுக்கு யாரும் உதவவில்லை. எங்களை அழைத்த வந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர் என்று கூறி உள்ளனர்.

விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் எக்ஸ்ரே எடுப்பதற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் எங்கள் மீது யாரும் அக்கறை காட்டவில்லை என்று குறை கூறினார்.

இதுகுறித்து மருத்துவமனை செவிலியர் ஒருவர் கூறும்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை  பெற்றவர்கள் பலர் ஓரளவு குணமானதும் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தியும், அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தால்   செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை யாரும் கண்டுகொள்ள வில்லை என்று கூறினார்.

மோடியின் பிரசாரத்தின்போது மக்கள் கூட்டத்தை காட்ட,  பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை அழைத்து வந்த பாஜ தலைவர்கள், தற்போது அவர்களுக்கு உதவி செய்யாமல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

மினாட்பூர் பகுதியை சிபிஐ (எம்) தொழிலாளர்கள் மற்றும்  உள்ளூர் மக்களும்தான் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து  4 பாஜக ஆதரவார்கள் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.