கோஃபி அன்னான் மறைவுக்கு மோடி இரங்கல்

டில்லி:

ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,‘‘ஐ.நா. சபையின் முன்னாள் செயலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரும் தலைவராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும், உலகநாடுகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க எண்ணியவருமான அவரை உலகம் இழந்து விட்டது.

இந்த நூற்றாண்டின் இலக்குகளை எட்ட அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது. இந்த சோகமயமான வேளையில் அவரை இழந்து துயரப்படும் அபிமானிகள் மற்றும் குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.