பெங்களூரு: சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில், நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், கடந்த 2000 – 2010 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 6% என்ற அளவிற்கு மிகவும் உயர்ந்து காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறப்படுவதாவது; 2010ம் ஆண்டிற்கு மேல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கினாலும், அது மோடியின் ஆட்சி காலகட்டமான 2016ம் ஆண்டுதான் உச்சத்தை தொட்டது.

இளைய தலைமுறையினரில், 20 – 24 வயதுக்கு இடைபட்ட பிரிவினரிடையே, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக நிலவுகிறது. இந்த வயதினர்தான் முக்கியமான இளம் ஆற்றல் எனும்போது, இவர்களுக்கான வேலையின்மை என்பது ஒரு ஆபத்தான அடையாளம்.

இந்தப் பிரச்சினை, நகரம் – கிராமம் என்றில்லாமல், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த ஆண், பெண்களை கடுமையாக பாதித்துள்ளது. அதேசமயம், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் நிலைமைதான் படுமோசம்.

மோடியின் நடவடிக்கையால், அவர்களுக்கான பணி வாய்ப்புகள் கிடைப்பதில் அதிக சிக்கல்கள் உள்ளன என்று பல்வேறான அதிர்ச்சிகர தகவல்களைத் தருகிறது அந்த ஆய்வு.

– மதுரை மாயாண்டி