டிரம்பை போல மோடி சிறுபான்மையினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்!! மார்டின் லூதர்

பெங்களூரு:

அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கம் நடத்திய மார்டின் லூதரின் வாரிசு 3வது மார்டின் லூதர் மன்னர் மனித உரிமை வக்கீலாகவும், சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

இவர் பெங்களூருவில் நடந்த அம்பேத்கர் குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரச்சாரத்தை போல், பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரமும் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு கொடூரமான குரோதத்தை கட்டவிழ்த்து விடும் வகையில் ஒரே மாதிரியாக இருக்கிறது.

நாட்டின் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு இருப்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கு தீர்வு காண உலகளவில் சிறந்த சிந்தனைகளை ஒன்றிணைக்க வேண்டும். எனது தந்தை மார்டின் லூதரும், அம்பேத்கரும் பல்வேறு சிந்தனைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அம்பேத்கர் இ ந்தியாவிற்கு வெளியில் பிரபலமடையவில்லை’’ என்றார்.

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி பேசுகையில்,‘‘ எனினும் ஒவ்வொருவருக்குள்ளும் அம்பேத்கர் இருப்பதாக எண்ணி செயல்பட வேண்டும். அம்பேத்கரின் செயல்பாட்டிற்கு சாட்சியாக சமீபத்தில் நடந்த இ ந்திய ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த், மீராகுமார் ஆகிய இரு தலித்களுக்கு இடையே போட்டி நடந்ததை கூறலாம்’’ என்றார்.

அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பேசுகையில்,‘‘ கடந்த 3 ஆண்டுகளாக சமூக நிதி காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு புரட்சிக்கும் எதிர் புரட்சி இருக்கும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். தற்போது எதிர் புரட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.