மோடியின் வெளிநாட்டு டூர் மீண்டும் தொடக்கம்! டிரம்பை சந்திக்கிறார்

டில்லி,

பிரதமர் மோடியின் வெளிநாட்ட சுற்றுப்பயணம் இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று காலை  டில்லியில் இருந்து புறப்பட்டார்.

தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் மோடி முதலில்  போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார். அங்கு போர்ச்சுகல் அதிபருடன்  இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதையடுத்து அமெரிக்கா செல்லும் மோடி, அங்கு புதிய அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.

கடைசியாக அவர்   நெதர்லாந்து செல்கிறார்.

சுற்றுப்பயணம் குறித்து மோடி ட்விட்டரில் பதிவு செய்திருப்பதாவது,

. ‘இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடனான உறவு மேம்படும். வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

முக்கியமாக என் அமெரிக்க பயணத்தால் இந்தியா-அமெரிக்கா உறவு வலுவடையும்.

இது இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உலகத்தின் வளர்ச்சிக்கே வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.