சாரிபாக், ஜார்க்கண்ட்

ந்திரா காந்தி காலத்தில் இருந்த அவசரநிலைக் காலத்தை விட மோடி அரசு மோசமாக உள்ளதாக யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாஜக அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா.   தற்போதைய மோடி அரசுக்கு எதிராக இவர் பல கருத்துக்கள் கூறி வந்தார்.   ஒவ்வொரு கருத்தும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  சமீபத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகினார்.   நேற்று ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் கில் உள்ள தமது இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது யஷ்வந்த் சின்ஹா, ”நாட்டில் இருக்கும் எந்த சமுதாயமும் மத்தியில் இருக்கும் அரசால் பாதுகாப்பாக உணரவில்லை.    எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் போனதற்கு பாஜக அரசே காரணம் ஆகும்.    மோடி அரசு ஊடகங்களையும், தேர்தல் ஆணையத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது.

எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட மத்திய அரசு பல விதங்களில் செயல்படுகிறது.   இதற்காக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை பயன்படுத்துகிறது.   இது  இந்திராகாந்தி காலத்தில் கொண்டு வந்த அவசரநிலையை விட மோசமான நடவடிக்கை ஆகும்.    எனது விமர்சனங்கள் எல்லாவற்றிலும் உண்மை இருந்ததாக பாஜக தலவர்கள் பலர் கூறி உள்ளனர்.   ஆனால் கட்சிக்குள் இதை வெளிப்படுத்த அவர்கள் பயப்படுகின்றனர்” என கூறினார்.