மோடியின் கட்டிப்பிடி வைத்தியம் அமெரிக்கா விசாவுக்கு வேலை செய்யாது….ராகுல்காந்தி

டில்லி:

ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் தொழிலார்களின் வாழ்க்கை துணைக்கு வழங்கப்பட்டு வரும் ஹெச்4 விசா நடைமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ அமெரிக்காவின் புதிய விசா விதிமுறைகள் இந்தியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகும். மோடியின் கட்டிபிடி அரவணைப்பு வேறு எதையாவது பெற்று தரும். அது விசாவுக்கு கிடையாது. அதை நீங்களாக தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.