முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் இந்தியாவை சீண்டிய போதெல்லாம் நிதானத்தைக் கடைப்பிடித்த மன்மோகன்சிங் அரசை அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த இன்றைய பிரதமர் மோடி கடுமையாக விமர்ச்சித்து “ஒரு வேளை மன்மோகன் சிங் இடத்தில் நான் மட்டும் இருந்திருந்தால்…” என்று ஆரம்பித்து பேசிய வீராவேசமான பேச்சுக்கள் அனைத்தும் இன்று திரும்ப எடுக்கப்பட்டு மீடியாக்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

moodi

2011-ஆம் ஆண்டு ராஜாத் ஷர்மா என்ற டிவி நிருபரிடம் அளித்த பேட்டியில் பாகிஸ்தானை அவர் “எதிரி நாடு” என்று “கடைந்தெடுத்த பொய்யர்கள்” என்றும் விமர்ச்சித்திருந்தார். 26/11 தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் மோடி “அவர்கள் இவ்வளவு தூரம் உள்ளே நுழைந்து அடித்தபின்னும் அவர்களை எதிர்கொள்ளாமல் அமெரிக்காவிடம் அபயமிடுவது ஏன்? இதுவே நானாக இருந்திருந்தால் இந்நேரம் ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருந்திருப்பேன். இந்திய பிரதமரே! பாகிஸ்தானுக்கு லவ் லெட்டர் எழுதுவதை விட்டு விட்டு நடவடிக்கையில் இறங்குங்கள்!” என்று சிம்ம கர்ஜனை செய்ததும் இன்று மீண்டுடும் நினைவுபடுத்தப்படுகிறது.
ஆனால் மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்தபின்னர் பாகிஸ்தான் தனது பழைய சீண்டலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த உரி தாக்குதலாகட்டும், அதற்கு முன்னர் நடந்த பதான்கோட் தாக்குதலாகட்டும், கடந்த ஜூலையில் நடந்த குர்தாஸ்பூர் காவல் நிலைய தாக்குதலாகட்டும். எல்லாவற்றிலும் இன்றைய மோடி அரசு அன்றைய மன்மோகன் அரசு கடைப்பிடித்த அதே நிதானத்தைத்தான் கடைப்பிடித்து வருகிறது. இது அரசியல் விமர்ச்சகர்களின் விமர்ச்சனத்துக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. அந்த வீராவேசமெல்லாம் வெறும் ஓட்டுகளை குவிக்கத்ததானா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

  1. இந்தியா பாகிஸ்தானுடன் சமாதான முயற்சிகள் செய்துவரும் அதே வேளையில் பாகிஸ்தான் இதுபோன்ற சீண்டல்களில் ஈடுபடும்போது அதற்கு பயத்தை உண்டுபண்ணக்கூடிய திடமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
  2. மேலும் இந்தியா தன்னுடைய நேர்மையை தொடர்ந்து காத்துக்கொண்டே பாகிஸ்தான் செய்யும் நரித்தந்திரங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த வேண்டும்.
  3. இந்தியா பாகிஸ்தானை தண்டிக்க விரும்பினால் அதனுடனான வியாபார உறவுகளைத் துண்டிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஒரு மறக்கமுடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்

என்பது போன்ற கருத்துக்களை அரசியல் நோக்கர்கள் பத்திரிக்கைகளிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.