நியூயார்க்: கொரோனா பரவலை மோடியின் இந்தியா கட்டுப்படுத்திய விதம் மிகவும் மோசமானது என்று விமர்சித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்.
அவர் கூறியுள்ளதாவது, “என்ன செய்யக்கூடாது என்பது இந்தியா ஒரு உதாரணக் குழந்தை. இந்திய அரசு அறிவித்த உரடங்கு என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நோய் பரவவே செய்தது.
ஊரடங்கு என்ற ஒரு விஷயத்தை இந்தியா கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. ஆனால், ஒரு ஏழை நாட்டில், ஊரடங்கு என்பது என்ன விளைவு ஏற்படுத்தும் என்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.
மக்கள் எப்படி வாழ்வார்கள்? தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? என்பது குறித்து யோசிக்கப்படவில்லை. வைரஸைப் பரப்புவதைவிட மோசமானது எதுவுமில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க முடியாது.
நான் ஒரு உள்ளடங்கிய(அனைவரும் இணைந்த) சமூகத்தை உருவாக்கத் தொடங்குவேன். எது செய்யப்பட வேண்டுமோ, அதற்கு எதிர்மாறானதுதான் பிரிவினை அரசியல். மோடி, உங்களின் நாட்டை பிளவுபடுத்த முயல்கிறார். அவரின் இந்தச் செயல், நாட்டின் அடித்தளத்தையே பலவீனமாக்கிவிடும்” என்று பேசினார்” ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்.