புதுடெல்லி: உலகளவில் கொரோனா பரவலில், அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, தற்போது, 63,98,848 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா, அதற்கடுத்து, 40,92,550 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பிரேசிலை பின்தள்ளி, இரண்டாமிடத்திற்கு வந்துள்ளது இந்தியா.

40,91,801 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகளவில் மூன்றாமிடத்தில் உள்ளது பிரேசில். ரஷ்யாவில் 10,20,310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்காமிடத்தில் உள்ளது அந்நாடு.

பெரு, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள், அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

உலகளவில் மொத்தமாக 2,69,17,845 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மட்டும் 1,33,054.

அமெரிக்காவில் புதிய தொற்றுகளின் எணணிக்க‍ை 9791 மற்றும் இந்தியாவில் அந்த எண்ணிக்கை 72,311. ரஷ்யாவில் 5205 என்பதாக உள்ளது.