மத்திய அரசின் மருத்துவ காப்பிட்டு கட்டணங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவையா?

டில்லி

த்திய அரசு அறிவித்துள்ள மருத்துவ காப்பிட்டின் தனியார் மருத்துவ மனைக் கட்டணங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினம் முதல் மருத்துவ காப்பீடு திட்டம் ஒன்றை அறிவித்தார்.   அந்த காப்பிட்டின் படி உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் நலிவுற்றோருக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.    ஜன ஆரோக்ய யோஜனா என்னும் அந்த காப்பிட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும் கட்டணங்கள் குறித்து திட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.    அந்த அறிக்கை மருத்துவமனைகளிடையே அதிருப்தியை உண்டாகி உள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவர் சங்க தலைவர் அசோகன், “இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் சாதாரண மற்றும் நடுத்தர மருத்துவமனை கட்டணங்களை விடவே மிகவும் குறைவாக உள்ளன.   ஒவ்வொரு சிகிச்சையும் தனித்தனியாக பார்ர்கும் போது வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் 25% மட்டுமே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி இவ்வளவு குறைவான தொகைக்கு சிகிச்சைகள் அளித்தால்  மருத்துவமனைகள் கடும் இழப்புக்கு உண்டாகும்.   அதனால் மருத்துவமனைகள் மூடப்பட்டு மருத்துவ சேவையில் கடும்பாதிப்பு உண்டாகும்.    அதனால் பல தனியார் மருத்துவமனைகள் இந்த காப்பிட்டு திட்டத்தினுள் வர மறுக்கக் கூடும்.” என தெரிவித்துள்ளார்.