மோசடி தொழிலதிபர்களையே சகோதரர்களாக பார்க்கிறார் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தாடியா:

பிரதமர் மோடி, ஒருபோதும் விவசாயியையோ, தொழிலாளி போன்ற ஏழை மக்களையோ நண்பர்களா நினைத்ததில்லை.. ஆனால் மோடி தொழிலதிபர்களான  மெகுல் சோக்சி, நிரவ் மோடி மற்றும் வங்கி கடனை கட்டாத அனில் அம்பானி போன்றோரை  சகோதரர் (பாய்) என அன்புடன் அழைக்கிறார் என்று ராகுல் காந்தி கூறினார்.

த்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை அரியணையில ஏற்ற ராகுல்  ம.பி. மாநிலத்துக்கு பல முறை சுற்றுப்பயணம் செய்து மக்களிடையே கலந்துரையாடி வருகிறார்.  இந்த நிலையில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி  தேர்தல் பிரசார கூட்டத்தில்  அகில இந்திய தலைவர் ராகுல் காந்திகலந்துகொண்டு பேசினார். அப்போது ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து சரமாரியாக குற்ற சாட்டினார்.

ரஃபேல் ஒப்பந்தம் வழங்குவதில் அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை (hal) தவிர்த்து விட்டு தனியாருக்கு சொந்தமாக அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதன் மூலம் மோடி அரசு இந்த நாட்டுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளது.

ரூ.45 ஆயிரம் கோடி வங்கி கடனை கட்டாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரபேல் ஒப்பந்தத்தை வழங்கியது ஏன்? என்று நான் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் இன்னும் பதில் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்…  என்னுடைய கேள்விகளுக்கு என் கண்ணை பார்த்து நேரடியாக அவர் பேச தயங்குகிறார் என்று கூறினார்.

மேலும்,  பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என செல்லும் இடங்கள் எல்லாம் மோடி முழங்கி வருகிறார். ஆனால் உத்தரபிரதேசத்தில் அவருடைய கட்சி எம்.எல்.ஏ. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார். முதலில், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என மோடி முழக்கமிட வேண்டும்.

மோடி தன்னுடைய பேச்சில் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி, நிரவ் மோடி மற்றும் வங்கி கடனை கட்டாத அனில் அம்பானி ஆகியோரை சகோதரர் (பாய்) என அன்புடன் அழைக்கிறார்.  தொழில் அதிபர்களிடம் மட்டுமே மோடி நெருக்கம் காட்டுகிறார். ஆனால் ஒருபோதும் விவசாயியையோ, தொழிலாளி போன்ற ஏழை மக்களையோ அவர் அவ்வாறு அழைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் ‘கோட்-சூட்’ போன்றவற்றை அணிவதில்லை. மோடியின் ஆட்சியில்ரர 15 முதல் 20 பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்து இருக்கின்றன.

உண்மையில் மோடி மனதில் ஏழைகளுக்கு இடம் இல்லை. தொழில் அதிபர்களுக்கு மட்டுமே இடம் உள்ளது என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ராகுல்,  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனேயே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

ராகுல்காந்தியின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்திருந்தனர். முன்னதாக ராகுல்காந்தி மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபலமான பீதாம்பர பீடம் ( Peethambara Peeth ) கோவிலில் சுமார் அரை மணி நேரம் பிரார்த்தனை செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டத.

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.