Random image

இந்தி மொழியை பரப்ப மோடி புதிய யுக்தி

டில்லி:

இந்தியை பரப்ப அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவரை வழங்கியுள்ளார்.

31-வது மத்திய இந்தி குழு கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘தினசரி உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும். அரசு விவகாரங்களுக்காக அதிகாரிகள் உரையாடும்போது சிக்கலான வார்த்தைகளை தவிர்த்து, உரையாடலை எளிமைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் சமூகத்தில் இந்தியின் பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும். இதற்கு கல்வி நிறுவனங்கள் உதவலாம். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்’’என்றார்.

கூட்டத்தில் குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் மாநில முதல்வர்கள், குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.