ஊழலுக்கு எதிரான மோடியின் சபதம் பஞ்சராகிவிட்டது….மாயாவதி

பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது.மைசூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மதசார்பற்ற ஐக்கி ஜனதா தளத்தை ஆதரித்து பேசுகையில், ‘‘ இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ், பா.ஜ.க. அரசுகளுக்கு விருப்பம் கிடையாது.

நிரவ் மோடி ஊழல், மெகுல் சோஸ்கி ஊழல் போன்ற பல்வேறு ஊழல்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. தவறு செய்யவும் மாட்டேன், தவறுகள் செய்ய அனுமதிக்கவும் மாட்டேன் என்று மோடி சபதம் செய்திருந்தார். தற்போது அந்த சபதம் ‘பஞ்சர்’ ஆக்கிவிட்டது’’ என்றார்.