பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் டீல் என பாஜக கட்சிக்குள்ளேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
susamy
மோடி அரசு பிரான்சிடமிருந்து 325 மில்லியன் டாலர்கள் செலவிட்டு வாங்குகிறது. ஒரு விமானத்தில் விலை 9 மில்லியன் டாலராகும். ஆனால் இதே அளவு திறனுள்ள 72 ரஷ்யாவின் சுகோய் சு 30 ரக போர் விமானங்களை 288 மில்லியன் டாலர்களுக்கே வாங்கலாம். இதன் மூலம் 36 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்துவதோடு ஒரு மடங்கு அதிகமான எண்ணிக்கையுள்ள விமானங்களும் நமக்கு கிடைக்கும்.
மோடியின் இந்த டீலை சுப்ரமணியசாமி உள்ளிட்ட பாஜக தலைவர்களே விமர்ச்சித்துள்ளார்கள். அதிகாரிகள் பிரதமரை தவறாக வழிநடத்துவதாகவும், இந்த டீலை எதிர்த்து தான் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாகவும் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.