டெல்லி: பிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன, முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தவிர்க்கிறார்கள் என்று பிரபல பிரெஞ்சு பொருளாதார நிபுணர் கை சோர்மன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் பொய் சொல்லவில்லை, நெருக்கடியின் போது சுதந்திர சந்தையின் பாதுகாப்பு உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளவர் சோர்மன். இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது:

பிரதமர் மோடி இந்திய தொழில்முனைவோரின் இயக்கத்தை ஆதரிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனால் அரசியல் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதால் சீர்திருத்தங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

இது பொருளாதாரத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதனால் ​​உள்நாடு மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பவில்லை.

மோடி தொடக்கத்தில் தேசிய அளவில் தொழில் முனைவோருக்கு ஒரு சந்தையை உருவாக்க ஆரம்பத்தில் ஆதரவு தந்தார். ஊழலுக்கு எதிராக போராடினார்.

ஆனால் பாதியிலேயே அனைத்தையும் மாற்ற தொடங்கி விட்டார். பொருளாதார மாற்றத்தை மறந்து, அரசியல் காய் நகர்த்தல்களில் இறங்கி விட்டார். அதனால் இந்தியாவுக்கும், இந்திய அரசுக்கும் கெட்ட பெயரை உருவாக்கி விட்டது.

இந்துத்வா, அரசியலமைப்பு சட்டங்கள் என எந்த நல்ல, தீய காரணங்களை என்னால் தீர்மானிக்கவில்லை. உலகப் பொருளாதாரம் மந்தமடைந்து கொண்டிருக்கும் தருணத்தில் மட்டுமே பொருளாதாரத்தின் மீதான எதிர்மறையான தாக்கத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வினவல்கள் எந்த பதிலும் பெறவில்லை. நிறுவனங்களில் முதலீடுக்கும் நம்பிக்கையுக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதாக அனைத்து பொருளாதார வல்லுனர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

தேசிய அளவில் இந்த நம்பிக்கை அரிக்கப்பட்டு விட்டது. இது மிகவும் வருத்தமாக ஒன்று, தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

உலக நாடுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும், முக்கிய பொருளாதாரம் கொண்ட நாடு என்று பாராட்டப்பட்ட இந்தியா, 2019-20 செப்டம்பர் காலாண்டில் வளர்ச்சி விகிதமானது ஆறு ஆண்டுளில் இல்லாத அளவு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.